விபத்தில் கணவரை இழந்து 5 பிள்ளைகளுடன் வறுமையில் வாழும் தாய்!
என் இனம் என் சனமே நிகழ்ச்சியானது தொடர்ந்தும் ஈழ தேசத்தின் வலியும் வறுமையுமாய் வாழும் எம் மக்களின் வாழ்வியலை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது.
எம்மவர்கள் எத்தனை வலிகள் தோய்ந்த வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு தோல் கொடுத்து தூக்கி விட கண்ணீரை துடைத்து ஆறுதல் சொல்ல உதவிக்கரம் நீட்டும் எம் ஆதரவுடன் பயணித்தபடி உள்ளோம்.
அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது பிள்ளைகளின் படிப்பிற்கு என்ன செய்வது வாழ்வதற்கு ஒழுங்கான வீடில்லை எனப் பல வேதனைகளோடு நாதியற்று வாழ்பவர்களுக்கு வீடு தேடி கொடுத்து வாழ்வில் நம்பிக்கையூட்டி புதியதொரு உதயத்தை உண்டு பண்ண எமது நிகழ்ச்சி வடமராட்சி கிழக்கு தாழையடி நோக்கி செல்கிறது.
அங்கு 5 பிள்ளைகளுடன் ஒரு தாயும் மிகுந்த கஷ்டத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் அவர்களை உங்கள் கண்முன் கொண்டு வந்துள்ளோம்.
அப்பாவின் உழைப்பிலும் அம்மாவின் உதவியிலும் நன்றாகச்சென்றுக் கொண்டிருந்த ஒரு குடும்பம் அண்மையில் நடந்த ஒரு கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே வீட்டி நிர்வகித்து வந்த தந்தை இறந்து போக தந்தையோடு வந்த மகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தந்தை இழந்ததைக் கூட அறியாமல் மருத்துவமனையில் அனுமதியில் சிகிச்சைப் பெற இழப்புக்கள், வேதனைகள், கஷ்டங்கள் என எல்லாமே ஒரேடியாக வந்து சேர என்ன செய்வதென தெரியாமல் நிலைகுலைந்துப் போனது இந்தக் குடும்பம்.
இந்த குடும்பத்தின் இன்னல் நிலைகளை எடுத்துக் கூறுகிறது என் இனம் என் சனமே நிகழ்ச்சி