இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் : எழுந்துள்ள குற்றச்சாட்டு

Indian fishermen Mannar Sri Lanka Fisherman
By Independent Writer Oct 01, 2026 11:34 AM GMT
Report
Courtesy: நயன்

இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக முன்னெடுத்து வருகின்ற மீன்பிடி நடவடிக்கைகளை முற்று முழுதாக நிறுத்துகின்ற செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டால் மாத்திரமே அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும்  என்று வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (01) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்றொழிலாளர்கள் அதிகாரி மட்டத்திலான பேச்சு என்று பல தடவைகள் போடப்பட்டிருந்த போதிலும், இன்று வரை அதற்கான எந்தவிதமான முன் ஆயத்தங்களும் நடைபெற்றதாக இல்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவை CID கைது செய்ய தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவை CID கைது செய்ய தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது

குறிப்பாக இந்த கடற்றொழிலாளர்களை ஏமாற்றுகின்ற அல்லது கடற்றொழிலாளர்களின் அந்த மீன்பிடியை தொடர்ந்து இந்திய கடற்றொழிலாளர்கள் எமது கடற்பரப்பில் மீன் பிடிக்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த கூடிய வகையில் தான் அமைச்சரின் கருத்துக்கள் இருந்தது.

அதிகாரி மட்டத்திலான பேச்சுவார்த்தை என்று ஒரு திகதி நிர்ணயிக்கப்பட்டு, அது இந்திய தரப்பால் வேறொரு திகதியாக மாற்றப்பட்டது என்று கூறப்பட்டாலும், இன்று வரை அதற்கான எந்தவிதமான முன் ஆயத்தங்கள், அதற்கான திகதி நிர்ணயிக்கப்படாமல் கால நீடிப்பாக இது இழுத்துச் செல்லப்படுகின்றது.

இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Encroachment By Indian Fishermen Into Sri Lanka

நாங்கள் எதிர்பார்ப்பது பேச்சுவார்த்தை என்பது இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி வந்து சட்டவிரோத மீன்பிடியை முற்று முழுதாக நிராகரிக்கிற அல்லது நிறுத்துகின்ற செயற்பாட்டில் அவர்கள் உடன்பட்டாலே ஒழிய அந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்காது என்பது எமது கருத்தாகும்.

இருந்தபோதிலும், ஒரு சுமூகமான நிலையை எட்டுவதற்கு நாங்கள் ஒரு பேச்சுவார்த்தையை முன் ஆயத்த ஏற்பாடுகளை நாங்கள் வரவேற்றிருந்த போதிலும், இன்று வரை அதற்கான திகதி நிர்ணயிக்கப்படாமல் ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

அதாவது ஏப்ரலில் இருந்து ஜூன் வரைக்கும் அவர்களின் அந்த தடைக்காலத்தை பயன்படுத்தக்கூடிய வகையில் காலத்தை இழுத்தடித்து, அந்த காலம் வரையும் அவர்கள் எமது கடலில் மீன்பிடிக்க கூடியவாறு, அதேபோன்று எமது கடற்றொழிலாளர்களின் அன்றாட வாழ்வாதாரத்தை அழிக்கும் செயற்பாடுகளும், அவர்களின் மீன்பிடி வலைகள் ஏனைய உபகரணங்களை சேதமாக்குகின்ற செயற்பாடுகளும் தொடர்ந்து நடந்த வண்ணமே இருக்கிறது.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

இந்திய அரசு

கடற்றொழிலாளர்கள் தாங்களின் நிலையை எவ்வாறாயினும் வெளிப்படுத்தியும், அதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் அல்லது எந்தவிதமான இழப்பீடுகள் அவர்களுக்கு வழங்கப்படாத சூழ்நிலைதான் இப்போது காணப்படுகிறது.

எனவே இந்திய கடற்றொழிலாளர்கள் விடயத்தில் இலங்கை அரசு மெத்தனப் போக்கோடு செயல்படுகின்றது என்பதும் தெளிவாக எங்களுக்கு தெரிகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய அரசு தமிழக அரசாக இருக்கட்டும் அல்லது மத்தியிலே இருக்கின்ற இந்திய அரசாக இருக்கட்டும் அவர்களின் நிலைப்பாடு எமது கடற்பரப்பில் மீன்பிடிக்க கூடியவாறு தங்கள் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் : எழுந்துள்ள குற்றச்சாட்டு | Encroachment By Indian Fishermen Into Sri Lanka

குறிப்பாக அண்மையில் கூட பலவிதமான ஆசை வார்த்தைகளும், அதேபோன்று சில நிவாரணங்களை மேலதிகமாக கூட்டி கொடுத்து பல விடயங்களை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

70 சதவீதமான நிதியை மானியமாகவும், 20 சதவீதமான நிதியை இலவசமாகவும் வழங்கி அந்த கடற்றொழிலாளர்களை மாற்றுத் தொழிலுக்கு உருவாக்க வேண்டும் என்று அவர்களாகவே உருவாக்கிக்கொண்ட செயற்பாடுகள் அங்கு நடைமுறையில் இருந்தாலும் கூட, அதனை ஊக்கவிக்காமல் இந்த ட்ரோலர் முறையையும் இந்த இழுவைமடி தொழிலையும் ஊக்குவிக்கின்ற வகையிலே, கைது செய்யப்படுகின்ற மீனவர்களுக்கும் அதேபோன்று தொழிலை இழக்கின்ற சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு வருவாய் இழப்பீட்டை கொடுத்து வருகிறார்கள்.

எனவே தமிழக அரசு நிர்வாக கட்டமைப்பில் கூறப்பட்டவாறு அந்த நடவடிக்கையை மேற்கொண்டால், இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்குமான ஒரு சுமூகமான நிலை எட்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.” என தெரிவித்துள்ளார்.

ரணிலின் மெய்ப்பாதுகாவலரை தாக்கிய ஒளிப்பதிவாளருக்கு பிணை!

ரணிலின் மெய்ப்பாதுகாவலரை தாக்கிய ஒளிப்பதிவாளருக்கு பிணை!

 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019