எரி சக்தி அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு : அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மீது இலஞ்ச ஊழல் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளதா ன்பதை தம்மால் கூற முடியாதுள்ளதாக அமைச்சர் நளின் டி ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இன்று தொடர்புடைய குற்றச்சாட்டு குமார ஜெயக்கொடி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு எழுந்த ஒரு பிரச்சினை அல்ல, மாறாக குமார ஜெயக்கொடி பொது சேவையில் இருந்தபோது எழுந்த ஒரு பிரச்சினை என்று அவர் கூறினார்.
ஜெயக்கொடி பொது சேவையிலிருந்து நீக்கப்படமாட்டார்
ஜெயக்கொடி அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் பல கீழ் மட்ட ஊழியர்கள் செய்த ஒரு குறைபாடு காரணமாக குற்றம் சாட்டப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் அரசாங்கத்திற்கு எந்த இழப்பும் ஏற்படாது என்றும், ஜெயக்கொடி பொது சேவையிலிருந்து நீக்கப்பட மாட்டார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், எதிர்காலத்தில் உருவாகும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படத் தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
