ரி20 உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆபிரிக்கா வெற்றி
ரி20 உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து(England) அணிக்கு எதிரான போட்டியில், 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா(South Africa) அணி வெற்றி பெற்றுள்ளது.
9-வது ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய இந்திய தீவுகளில்(WI) நடைபெற்று வருகிறது.
லீக் சுற்று முடிவில் 8 அணிகள் 'சூப்பர் 8 ' சுற்று போட்டிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன், தென் ஆப்பிரிக்கா அணி நேற்று (21)மோதியது.
இங்கிலாந்து அணி
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி வீரர்கள் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் குவித்தனர்.
தென் ஆபிரிக்கா தரப்பில் அதிரடியாக விளையாடிய டி காக் 65 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தென் ஆபிரிக்கா அணி
இதனை தொடர்ந்து 164 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதற்கமைய, இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. தென் ஆபிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா அணி வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |