ரொறன்ரோவில் வாடகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கனடாவின் ரொறன்ரோவில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது நவம்பர் மாதத்தில் நகரின் சராசரி வாடகைத் தொகை 2.4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் ரொறன்ரோவில் வாடகைத் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வந்தது.
மாதாந்த வாடகை
எனினும் அண்மைய இரண்டு மாதங்களாகவே வாடகைத் தொகை ஒப்பீட்டளவில் சிறு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், கனடாவில் வாடகை அதிகமான இரண்டாவது நகரமாக ரொறன்ரோ தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவார் கனடாவில் மிகவும் அதிக வாடகைத் தொகையைக் கொண்ட நகரமாக காணப்படுகின்றது.
ரொறன்ரோவில் ஒரு படுக்கையறைக் கொண்ட வாடகை வீடு ஒன்றின் சராசரி மாதாந்த வாடகை 2600 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |