இலங்கையை விட்டு அகலும் அமெரிக்க யூலியும் ட்ரம்ப் மிசனுடன் உள்நுழையும் எரிக் மேயரும்!
தித்வா தாக்க இலங்கையில் தமக்குரிய இராணுவ நலன்களை எடுக்க இந்தியா உட்பட்ட பல வெளிநாடுகளும் முயல்வதன் அடிப்படையில் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, இன்று கொழும்பில் தென்பட்டார்.
ஜெனரல் திவேதி பிராந்தியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில் இலங்கையில் இன்னும் இன்னும் இந்தியாவுக்குரிய வாய்ப்புகளை அதிகரிக்க முயல்வார் என்பது நிதர்சனம்.
அமெரிக்கா கடந்த 3 ஆம் திகதி வெனிசூலாவுக்கு கொடுத்த அடியுடன் பூகோள அரசியல் புதிய கொதிநிலைக்குள் சென்ற நிலையில் இதுவரை சிறிலங்காவுக்கான அமெரிக்கத்தூதர் பொறுப்பில் இருந்த ஜோ பைடன் கால இராஜதந்திரியான ஜூலி சங் கொழும்புக்கான தனது நான்கு ஆண்டு கால மிசனை முடித்துக்கொண்டு, தைப்பொங்கலுடன் இலங்கையை விட்டு வெளியேற அவரது இடத்துக்கு டொனால்ட் ட்ரம்ப்பின் தெரிவான எரிக் மேயர் வரலாமென எதிர்பார்க்பப்டுகிறது.
அமெரிக்க-சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவது, இலங்கையை அண்டிய கடலை அமெரிக்காவுக்காக எடுப்பது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் உறுதித்தன்மையை பாதுகாப்பது ஆகிய கவச இலக்குகளுடன் எரிக் மேயர் கொழும்பில் குந்துவார் என எதிர்பார்க்கபடும் நிலையில் இலங்கையின் உள்ளுரில் கல்வித்துறையை சார்ந்த ஒரு பிரச்சனை வெடிப்பு பதிவாகிய நிலையில் இந்தவிடயங்களை மையப்படுத்திவருகிறது செய்தி வீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 9 மணி நேரம் முன்