அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Shalini Balachandran
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை பட்டியல் வெளியாகும்.
இந்தநிலையில், இந்த வாரத்திற்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்பு பட்டியல் வெளியாகியுள்ளது.
இதன்படி,
- கோதுமை மா - 135.00 - 177.00
- வெள்ளை சீனி - 215.00 - 237.00
- பருப்பு - 250.00 - 273.00
- உருளைக்கிழங்கு (இறக்குமதி) - 120.00 - 203.00
- பெரிய வெங்காயம் (இந்தியா) - 120.00 – 154.00
- பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) - 100.00 - 123.00
- சின்ன வெங்காயம் (இறக்குமதி) 240.00 - 365.00
- உலர்ந்த நெத்தலி (தாய்) 700.00 - 809.00
- உலர்ந்த நெத்தலி (மற்றவை) 550.00 - 686.00
- காய்ந்த மிளகாய் - 580.00 - 654.00
- முட்டை (வெள்ளை) - 23.00 - 30.00
- முட்டை (பழுப்பு) - 25.00 - 32.00
- ரின் மீன் (உள்ளூர்) - சூரை - 425 கிராம் 330.00 - 380.00
- ரின் மீன் (உள்ளூர்) - கானாங்கெளுத்தி - 425 கிராம் 320.00 - 420.00
- இறக்குமதி ரின் மீன் - 425 கிராம் 350.00 - 415.00
- உள்ளூர் பச்சரிசி - வெள்ளை 205.00 - 220.00
- உள்ளூர் பச்சரிசி - சிவப்பு 205.00 - 220.00
- உள்ளூர் நாட்டரிசி - வெள்ளை 215.00 - 230.00
- இறக்குமதி பச்சரிசி 200.00 - 210.00
- இறக்குமதி நாட்டரிசி 210.00 - 220.00
- தோலுடன் கூடிய பிராய்லர் கோழி (முழு கோழி) - 800.00 - 935.00 22.
- முழு கொழுப்புள்ள பால்மா 400 கிராம் - 940.00 - 1050.00
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தது.
குறித்த விடயத்தை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்திருற்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்