உச்சம் தொட்ட வாழ்க்கைச் செலவு...! அலட்சியமாக அரசியல்வாதிகள் - சாடும் அமைச்சர்
பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அதிகாரத்துக்கு வந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் கே.டி லால்காந்த (K. D. Lalkantha) கவலை வெளியிட்டுள்ளார்.
கண்டியில் (Kandy) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்குடன் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது.
பொதுமக்களின் வாழ்க்கைத்தரம்
ஆனால் இப்போது பார்த்தால் இந்த அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் வாகனங்கள், ஆடம்பர உடைகள், உணவுகள் என்று சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
அதே போன்று பொதுமக்களுக்காக சேவையாற்றும் அதிகாரிகளும் எப்போதும் சுகபோகமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் இன்னும் உயரவில்லை. அவர்கள் தொடர்ந்தும் திண்டாட்டத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் லால்காந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
