2027 முதல் தேசிய சொத்து வரி: இலங்கையில் புதிய வரி நடைமுறை
Sri Lanka
Sri Lanka Government
NPP Government
By Shalini Balachandran
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிக விரைவில் இலங்கையில் தேசிய சொத்து வரி அறவிடல் முறையொன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
இலங்கை பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக காலனித்துவ ஆட்சி நிலவிய காலத்தில்தான் முதன்முறையாக இலங்கையில் சொத்துவரி அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போதைக்கு இலங்கையின் நகர்ப்புற சொத்துக்களுக்கு மட்டுமே பல்வேறு உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் சொத்துவரி அறவிடப்படுகின்றது.
புதிய சொத்து
அதற்குப் பதிலாக இலங்கையின் அனைத்துப் பிரதேசங்கள், கிராமப்புறங்களை உள்ளடக்கியதாக புதிய சொத்து வரியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த சொத்துவரியை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்