முன்னாள் அமைச்சர் ஒருவரின் காணி மோசடி தொடர்பில் புதிய விசாரணை
கடந்த 2019 ஆம் வருடம் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் காணி மோசடியொன்று குறித்த விவகாரம் விரைவில் விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சர் சாலிந்த திசாநாயக்க, சந்திரிக்கா ஆட்சியின் போது காணி அபிவிருத்தி பிரதியமைச்சராக செயற்பட்டிருந்தார்.
அக்காலகட்டத்தில் அவர் தன் மனைவி தலைவியாக இருந்த விவசாயிகள் கூட்டுறவு அமைப்பொன்றுக்கு அரசாங்கத்தின் 76 ஏக்கர் காணியை நீண்ட கால குத்தகைக்கு வழங்கியிருந்தார்.
ஊழல் மோசடிகள்
குறித்த காணி அரசாங்கத்தின் ஐந்து கோடி ரூபா செலவில் சீரமைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவ்வாறு நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
எனினும், குத்தகைக்கு வழங்கப்பட்டது தொடக்கம் இதுவரை குறித்த விவசாயக் கூட்டுறவு அமைப்பின் மூலம் அரசாங்கத்துக்கு ஒரு சதமேனும் குத்தகைத் தொகையாக செலுத்தப்படவில்லை.
இது தொடர்பில் லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தடுப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த காணி விவகாரத்துடன் தொடர்புடைய சாலிந்தவின் மனைவி மஞ்சுளா திசாநாயக்க, கடந்த கோட்டாபய தலைமையிலான ஆட்சியின் போது குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
