அத்தியாவசிய சேவைகளை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
15 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியில் ஜனாதிபதியின் செயலாளர் என்.எஸ். குமநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
அதன்படி, அத்தியாவசிய சேவைகளாக மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீதிகள், நீர் வழங்கல், உணவு சேவைகள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கள அதிகாரிகள், நோயாளர் காவு வண்டி சேவைகள், மத்திய வங்கி, அரசு வங்கிகள் மற்றும் காப்பீட்டு சேவைகள், நீர்ப்பாசனம், தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள், ஊடக சேவைகள், தாழ்வான நில மீட்பு, விவசாயம் மற்றும் விவசாய காப்பீடு ஆகிய சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டித்வா சூறாவளி
பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முக்கியமான பொது சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க நவம்பர் 29 அன்று முதலில் அத்தியாவசிய சேவைகள் வர்த்தமானியை வெளியிட்டார்.

டித்வா சூறாவளியின் தொடர்ச்சியான தாக்கத்தில் இருந்து சாதாரண பொது வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் முக்கியமான செற்பாடுகளின் தொடர்ச்சியைப் பராமரிப்பதற்கும் மேலதிக சேவைகள் அவசியமானவை என்று பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
