ஜனாதிபதி அநுரவிற்கு ஆலயம் கட்ட தயாராகும் ஜீவன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலும் 1000 ரூபாய் வேதனத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியினால் முடியுமாயின், அவருக்கு ஆலயம் கட்டுவதற்கும் தாம் தயாராகவுள்ளாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
நோர்வூட் (Norwood) பகுதியில் நேற்று (23.04.2025) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான் “நாட்டின் ஜனாதிபதி , தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு
ஆனால் தற்போது அவர் வாக்குறுதிகளை மறந்து எதிர்கட்சி தலைவர் போன்று செயற்பட்டு வருகின்றார். ஐனாதிபதி தேர்தல் காலங்களில் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதாக உறுதியாக அறிவித்ததுடன், வரவுசெலவு திட்ட வாசிப்பிலும் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது அனைத்தையும் மறந்து தோட்டக் கம்பணிகளுடன் கலந்துரையாடி முடியுமான அளவு 1700 ரூபாய் நாட்சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக அறிக்கைவிடுத்துள்ளார்.
இதனை ஏமாற்று நாடகமாகவே புரிந்துகொள்ள வேண்டும்.நான் அமைச்சராக இருந்த காலப்பகுதிகளில் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக என்னால் முடிந்தளவிலான வேலைகளை மக்கள் நலனுக்காக செய்திருந்திருந்தேன்.
தற்போது ஜானாதிபதியால் வரவுசெலவு திட்டத்தினூடாக மலையகப் பெருந்தோட்ட பகுதிகளுக்கான நிதி ஓதுக்கீட்டில் அநீதி இழைக்கப்பட்ட கண் துடைப்பாகவே காணப்படுகின்றது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பானது நிறந்தர தீர்வாக அமையாது, மாறாக நாட்கூலி முறைமை இல்லாதொழிப்பதே நிறந்தர தீர்வாகும்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
