AI தொழில்நுட்பத்தை நிறைவேற்றிய ஐரோப்பிய ஒன்றியம்:விதிமீறலுக்கு மில்லியன் கணக்கில் அபராதம்!
அமெரிக்கா, சீனா, பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளுக்கு முன்னதாக, செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் (European Union) நிறைவேற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய கவுன்சில் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையே நடந்த 37 மணி நேர பேச்சுவார்த்தையை தொடர்ந்தது.
அதனை தொடர்ந்து செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்துவதற்கான கட்டமைப்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது.
நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் : இஸ்ரேல் பிரதமரின் ஆலோசகர் வெளியிட்ட பகீர் தகவல் (காணொளி)
ஒரு வரலாற்று தருணம்
இந்த ஒப்பந்தத்தை ஒரு வரலாற்று தருணம் என்று சட்டத்தை மேற்பார்வையிட்ட ஐரோப்பிய ஆணையர் Thierry Breton தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மட்டுமின்றி, சமூக ஊடகங்கள் மற்றும் தேடுபொறிகளும் புதிய சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுவதோடு X, TikTok மற்றும் Google போன்ற நிகழ்நிலை தளங்களும் இந்த சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.
2025ஆம் ஆண்டுக்குள் சட்டம் நடைமுறைபடுத்தபடும் என எதிர்ப்பார்க்கபடும் நிலையில் சட்டத்தின் விவரங்கள் குறித்து இன்னும் வெளியிடப்படவில்லை.
விதிமீறலுக்கு அபராதம்
மேலும் இந்த ஒப்பந்தம் ஐரோப்பாவில் புதுமைகளை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த அதிநவீன தொழில்நுட்பத்தின் சாத்தியமான ஆபத்துக்களைக் கட்டுப்படுத்துகிறது.
ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களைப் பாதுகாப்பதன் மூலமும், நாடுகள், நிறுவனங்கள் மற்றும் இராணுவ ஒப்பந்தக்காரர்கள் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்வதன் மூலமும், நிதி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்றவற்றைப் போலவே செயற்கை நுண்ணறிவை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன் இந்த சட்டம் உள்ளது.
மேலும், விதிமீறலுக்கு 35 மில்லியன் யூரோ அல்லது நிறுவனத்தின் உலகளாவிய வருவாயில் 7 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |