பண்டோரா ஆவணங்களால் சிக்கவுள்ள மேலும் பல இலங்கையர்கள்
sri lanka
people
news
By Shalini
பண்டோரா ஆவணங்கள் மூலம் பணத்தை மறைத்து வைத்துள்ள மேலும் பலரின் பெயர்கள் வெளியிடப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கிடைக்கும் தகவல்களுக்கு அமைய சுமார் 65 இலங்கையர்களின் பெயர்கள் வெளியிடப்படவுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆவணங்களில் குறிப்பிட்ட காலவரையறை குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான மற்றுமு் மேலதிக செய்திகளுடன் வருகின்றது இன்றைய மாலை நேரச் செய்திகள்....