பிரித்தானியா செல்லவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவிற்கு (United Kingdom) செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு விண்ணப்பதாரர்கள் e-Visa எடுத்துக்கொள்ளவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசின் புதிய தீர்மானத்தின் படி, ஜூலை 15, 2025 முதல் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு e-Visa கட்டாயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வேலை அல்லது படிப்பு விசா விண்ணப்பதாரர்கள் இனி பாஸ்போர்ட்- இல் விக்நெட் (vignette) ஸ்டிக்கர் பெறமாட்டார்கள்.
டிஜிட்டல் விசா
இந்த புதிய முறை, ஒரே நாளில் பயோமெட்ரிக்ஸ் தரவும், கடவுச்சீட்டை மீண்டும் வாங்கவும் அனுமதிக்கிறது. இதனால், விசா பெற்றுக்கொள்ள அலுவலகத்திற்கு மீண்டும் வரவேண்டிய அவசியம் இல்லாமல் செய்யப்படுகிறது.
eVisa பெறும் விண்ணப்பதாரர்கள், UKVI (UK Visas and Immigration) கணக்கு கட்டாயம் உருவாக்க வேண்டும். இது மூலமாகவே அவர்கள் தங்களது டிஜிட்டல் விசா மற்றும் குடியிருப்பு தகவல்களை காணலாம்.
தற்போது வரை, வேலை மற்றும் படிப்பு தவிர்ந்த மற்ற விசாக்களுக்கு அல்லது சார்ந்திருப்பவர்களுக்கான (dependant) விண்ணப்பங்களுக்கு மட்டும் vignette வழங்கப்படும்.
ஆனால் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு விசாக்களுக்கு முழுமையான டிஜிட்டல் மாறுதல் நடைமுறைக்கு வருகிறது.
UKVI, பாஸ்போர்ட் ஸ்டிக்கர் அல்லது biometric residence permit-களை (BRP) எதிர்காலத்தில் முழுமையாக கைவிட திட்டமிட்டு, முழு டிஜிட்டல் குடியிருப்பு மற்றும் identity நிர்வாக முறைமைக்கு மாறி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
