மேயர் பதவிக்காக களமிறங்கும் முன்னாள் அமைச்சர்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை மாநகர மேயர் பதவிக்கு புதிய லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சரவை அமைச்சர் நந்திமித்ர ஏகநாயக்க இன்று (15) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நந்திமித்ர ஏகநாயக்க,
தற்போதைய அரசியலால் மக்கள் ஏமாற்றம்
தற்போதைய அரசியலால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சி மாத்தளை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதற்கு தான் தலைமைத்துவத்தை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசியல் பிரவேசம்
நந்திமித்ர ஏகநாயக்க 1989 இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் சந்திரிகா அரசாங்கத்தில் சுற்றாடல் மற்றும் வன வள அமைச்சராகவும், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பிரதி அமைச்சராகவும், நல்லாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றினார்.
இவர் மியன்மாருக்கான தூதுவராகப் பணியாற்றியவர் மற்றும் மாத்தளை மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியும் ஆவார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
