ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
உத்தரவிட்ட நீதவான்
இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகினார்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ், இது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்கு என நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
எனினும், இந்த வழக்கின் விசாரணையை இறுதித் தடவையாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |