சிஐடியில் 6 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கிய டிரான் அலஸ்
புதிய இணைப்பு
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சிறிது நேரத்திற்கு முன்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து (CID) வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அனுப்பிய அழைப்பாணையின்படி, முன்னாள் அமைச்சர் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவில் (CCD) பணியாற்றிய ஒரு காவல்துறை உத்தியோகத்தர் இறந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று (31) காலை முன்னியலையாகினார்.
இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக நேற்று (30) குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
வாக்குமூலம் பதிவு
வழக்கு தொடர்பான விபரங்கள் முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக அந்த அதிகாரி மேலும் சுட்டிக்காட்டினார்.
டிசம்பர் 31, 2023 அன்று, மாத்தறை வெலிகமவின் பெலேனா பகுதியில் உள்ள W15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழந்திருநதார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
