இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் உதய கம்மன்பில முறைப்பாடு
பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்திற்கு (CIABOC) சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முறைப்பாடளிப்பதற்காக இன்று (29) காலை குறித்த ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாதாந்த சம்பளத்தை கட்சி நிதிக்கு மாற்றி மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ” தொலைபேசி கட்டணம், எரிபொருள் மற்றும் அலுவலக பராமரிப்புக்காகப் பயன்படுத்தப்படும் இந்தப் பணத்தை கட்சி நிதிக்கு அனுப்பி அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகும்.
ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 160 பேரும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதில் மாதத்திற்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது.
எனவே, இந்த 160 பேரிடமும் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி இன்று நாங்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வந்துள்ளோம்." என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
