முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சருக்கு சிஐடி அதிரடி அழைப்பு
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, வரும் திங்கட்கிழமை (01) காலை 10 மணிக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு காவல்துறை சார்ஜென்ட் இறந்தது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதிரடி அழைப்பு
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐஜிபி தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட ஒரு குழு கைது செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தேசபந்து தென்னகோனைத் (deshabandu tennakoon) தவிர மற்ற சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாக, இவ்வாறு விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
