மறதியால் சொந்த வீடு தெரியாமல் 16 வருடங்களாக அலைந்த முன்னாள் இராணுவவீரர்

Kerala India Indian Army
By Sumithiran Nov 26, 2022 10:47 PM GMT
Report

கேரளாவில் மறதி நோயினால் பாதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் 16 வருடங்களுக்கு பின்னர் குடும்பத்தினருடன் இணைந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள பாவுக்கார பகுதியை சேர்ந்தவர் ஏஜி. சசீந்திரன். தற்போது அவருக்கு 70 வயதாகிறது. இராணுவத்தில் பணிபுரிந்துவந்த இவருக்கு மூன்று சகோதரிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு திருமணம் செய்வதற்காக கஷ்டப்பட்டு இராணுவத்தில் சேர்ந்திருக்கிறார் சசீந்திரன். நினைத்தபடியே தனது தங்கைகளுக்கு திருமணம் செய்துவைத்த அவர் கடைசிவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்திருக்கிறார்.

இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் சாரதியாக பணி

மறதியால் சொந்த வீடு தெரியாமல் 16 வருடங்களாக அலைந்த முன்னாள் இராணுவவீரர் | Ex Soldier Returned His Home After 16 Years

இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் சாரதியாக பணிபுரிந்து வந்திருக்கிறார் சசீந்திரன். இதனிடையே அவருக்கு டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்பட்டிருக்கிறது. இதனால் திடீரென ஒருநாள் சசீந்திரன் காணாமல் போயுள்ளார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது சகோதரிகள் மிகுந்த துயரத்தில் இருந்தனர்.கடந்த 16 ஆண்டுகளாக தேடியும் அவர்களால் சசீந்திரனை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது.

இந்நிலையில் தான், DPDO எனப்படும் பாதுகாப்புத்துறையில் பணிபுரிந்தவர்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் அலுவலக அதிகாரிகள் சசீந்திரனை தேடிச் சென்றிருக்கின்றனர். கடந்த 2007 ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து விலகிய அவருக்கு வழங்கப்பட வேண்டிய சுமார் 21 லட்சம் ரூபாய் பணம் நிலுவையில் இருந்திருக்கிறது. அதை வழங்க, அதிகாரிகள் தேடும்போது கோட்டயம் அருகே உள்ள ஒரு ஆதரவற்றோர் விடுதியில் சசீந்திரன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆவணங்கள் இல்லாததால் கிடைக்காத 21 இலட்சம்

மறதியால் சொந்த வீடு தெரியாமல் 16 வருடங்களாக அலைந்த முன்னாள் இராணுவவீரர் | Ex Soldier Returned His Home After 16 Years

சசீந்திரனுக்கு ஆதரவு அளித்துவந்த அந்த விடுதியின் காப்பாளர் அவரிடம் இருந்த பழைய ஐடியை கண்டுபிடித்திருக்கிறார். அதன்மூலம் DPDO அதிகாரிகளுக்கு அவர் தகவல் கொடுத்திருக்கிறார். இருப்பினும், சசீந்திரனிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை ஒப்படைக்க முடியாமல் போயிருக்கிறது.

இடைவிடாத முயற்சிக்கு கிடைத்தது பலன்

மறதியால் சொந்த வீடு தெரியாமல் 16 வருடங்களாக அலைந்த முன்னாள் இராணுவவீரர் | Ex Soldier Returned His Home After 16 Years

இதனிடையே அங்கிருந்தும் சசீந்திரன் காணாமல் போயிருக்கிறார். இடைவிடாத முயற்சியின் பலனாக அவர் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டு அவரது சகோதரியான விலாசினியிடம் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சசீந்திரனுக்கு சேரவேண்டிய பணமும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் குடும்பத்தினருடன் இணைந்துள்ள சசீந்திரன் இந்த பணத்தை வங்கியில் வைப்பு செய்ய இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி