காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சை
police
exam
postponed
By Sumithiran
நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் தொற்று காரணமாக பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களை நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
எழுத்துத் தேர்வு மே 08 அன்று கொழும்பு, அனுராதபுரம், கண்டி, அம்பாறை மற்றும் காலி ஆகிய இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் 0115811921 மற்றும் 0115811925 என்ற தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெறலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்