நாளைய புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவிக்கு இன்று நேர்ந்த துயரம்
நாளையதினம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி இன்று விபத்தில் சிக்கிய உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பரீட்சைக்கு முன்னரான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்த சிறுமி, தனது தந்தையின் முச்சக்கர வண்டியில் பாட்டி மற்றும் அத்தையுடன் அம்பலங்கொடவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
முச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம்
அங்கிருந்து மீண்டும் எல்பிட்டியவுக்கு திரும்பிய போது எல்பிட்டிய - பிட்டிகல வீதியில் முச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்து, பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
கராப்பிட்டிய தேசிய மருத்துவமனையில் அனுமதி
உடனடியாக எல்பிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி உயிரிழந்தார்.
சிறுமி உயிரிழந்த சம்பவம் பெறறோரை பெரும் துயரமடைய வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
