குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி குறித்து வெளியான தகவல்
மட்டக்களப்பு - குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப்பணியை இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சட்டத்தரணி முபாறக் மு.அஸ்ஸம் தெரிவித்துள்ளார்.
குறித்த மனிதப் புதைகுழி எதிர்வரும் நாட்களில் அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ள நிலையில் இன்று (17) குறித்த பகுதிக்கு விசேட கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள் மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டனர்.
களத்திற்கு நேரடி விஜயம்
இந்த சம்பவம் தொடர்பான வழக்கின் படி இன்று (17) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன், மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முபாறக் மு.அஸ்ஸம், காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குருக்கள்மடம் மனிதப் புதைகுழியின் சந்தேகத்திற்கிடமான இடத்தினை பார்வையிட்டனர்.

அத்துடன் இந்த குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |