அநுரவின் வாக்குறுதிக்கு தடையாகவுள்ள பெருந்தோட்ட உரிமையாளர்கள்!
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்கான பொறிமுறையை வகுக்க அரசாங்கத்துடன் மேலும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக கம்பனி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தலைமையிலான அநுரகுமார திசாநாயக்க மூலம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது.
இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவருக்கான 200 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அடிப்படை சம்பளம்
பெருந்தோட்ட நிறுவனங்கள் தற்போது தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு 1,350 ரூபா சம்பளத்தை வழங்கி வரும் நிலையில் ஜனவரி மாதத்திற்குள் அதை 1,550 ரூபா வரை 200 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக ஜனாதிபதி உட்பட அரசாங்கம் கடந்த காலங்களில் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
எனினும், இது தொடர்பாக அரசாங்கத்துடன் மேலும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என தோட்ட நிறுவனங்களின் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பெருந்தோட்ட அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட கம்பனிகள் கடந்த அரசாங்கங்களுடன் விளையாடியதைப் போன்று எங்களுடைய அரசாங்கத்துடன் விளையாட முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |