கெஹெலியவின் குடும்பத்தினர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை
Keheliya Rambukwella
Sri Lanka
Bribery Commission Sri Lanka
By Sathangani
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) மற்றும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் சிலர் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோரே இன்று (10) காலை அந்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பணச்சலவையின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர்கள் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாகத் குறிப்பிடப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்