காலாவதியான அரிசி விற்பனை : நுகர்வோர் அதிகாரசபையின் அதிரடி நடவடிக்கை
காலாவதியான அரிசி கையிருப்புகளை ஏற்றுமதி செய்தல் மற்றும் அவற்றின் திகதிகளை மாற்றி சந்தைக்கு விடுவிப்பது தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான அரிசியின் திகதிகளை மாற்றி சந்தைக்கு விடுகின்ற கடத்தல்காரர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி தட்டுப்பாடு
மேலும் நாட்டில் அரிசி தட்டுப்பாட்டுடன் இவ்வாறான செயற்படுகள் காரணமாக அப்பாவி நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை (Sri Lanka) சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சங்கத்தின் தவிசாளர் யு. கே. சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |