திருகோணமலை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள்
திருகோணமலை மாவட்டத்தின் இரண்டு பகுதிகளில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி, கண்ணிவெடி ஒன்றும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் கண்ணிவெடி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதனை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கண்ணிவெடி
குறித்த கண்ணிவெடியானது, மாவிலாறு யுத்தத்தின் போது புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்கள் கண்ணிவெடி ஒன்று இருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில், நீதிமன்ற அனுமதியைப் பெற்று அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி ரவைகள்
இதேவேளை, திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் நேற்று காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
வயல் உரிமையாளர்களினால் மொரவெவ காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே, குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த துப்பாக்கி ரவைகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |