யாழில் காணி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி பொருட்கள்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Shalini Balachandran
யாழில் (Jaffna) காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டுள்ளது.
யாழ் காவல் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் குறித்த வெடி பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து, இவ்விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நடவடிக்கைகள்
இதனை காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனடிப்படையில், இன்றையதினம் (22) குறித்த வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெறும் இந்த மீட்பு பணியில் யாழ்ப்பாண காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்