கோழி இறைச்சி உற்பத்தியாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
Sri Lanka
China
Economy of Sri Lanka
By Shalini Balachandran
இலங்கையிலிருந்து (Sri Lanka) கோழி இறைச்சி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை சீனாவிற்கு (China) ஏற்றுமதி செய்வதற்கான நீண்டகால தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது
இலங்கை வந்திருந்த சுங்கப் பொதுநிர்வாக பிரதி அமைச்சர் வாங் லிங்ஜங் (Wang Lingjung) உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஏற்றுமதிக்கான அனுமதி
இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இலங்கையில் அன்னாசிப்பழ உற்பத்தியாளர்கள் மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் சீன சந்தைக்கு கோழி இறைச்சி மற்றும் முட்டை மற்றும் அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்