மாலைதீவில் தீவு உருவாகுகின்றதா? சாணக்கியனின் குற்றச்சாட்டுக்கு கிடைத்தது பதில்
மாலைதீவில் தீவு ஒன்றை உருவாக்குவதற்காக இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என புவிச்சரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் சஜ்ஜன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்,
மாலைத்தீவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனம் ஒன்றுக்கு தேவையான வர்த்தக ரீதியிலான மணல் தொகை மாத்திரமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், குறித்த மணலானது குழாய் இணைப்பு மற்றும் நீர்நிலைகளை நிரப்புவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.
அதற்காக 8 க்யுப் மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், க்யுப் ஒன்றுக்கு 180,000 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் அறவிடப்பட்டுள்ள தெரிவித்தார்.
இதை விடுத்து, மாலைத்தீவில் தீவு ஒன்றை உருவாக்குவதற்காக இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மணலைக் கொண்டு மாலைதீவில் தீவு ஒன்று உருவாக்கப்படுவதாக நாடாளுமன்றில் சாணக்கியன் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார்.
எனினும் இந்த குற்றச்சாட்டு உண்மை என ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அமைச்சுப்பதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் தாம் துறப்பதாக சாணக்கியனுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர சவால் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.