இரண்டு மாதங்களில் இலங்கைக்கு கிடைத்த பாரிய வருமானம்
Sri Lanka
Prasanna Ranaweera
Export
By Sumithiran
கடந்த இரண்டு மாதங்களில் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 983.7 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.
ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாகவும், நாட்டில் தொழில் முயற்சியாளர்களின் எண்ணிக்கை 2.5% இலிருந்து 3% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
சரியான பொருளாதாரப் பாதையில்
நாடு தற்போது சரியான பொருளாதாரப் பாதையில் செல்வதை இந்தத் தரவுகள் உறுதிப்படுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று (28) அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்