யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார் எம்.கே. சிவாஜிலிங்கம்
Shivajilingam
Protest
Jaffna
By Vasanth
யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்று வரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் இன்றைய தினம் நல்லூர் போராட்ட களத்திற்கு சென்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அத்துடன் போராட்டத்தை மென் மேலும் வலுவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துச் சென்றுள்ளார்.