விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்! நீடிக்கப்பட்ட ஓய்வூதிய காலம்
டித்வா சூறாவளி காரணமாக மீன்பிடி மற்றும் விவசாய சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக ஓய்வூதியம் வழங்குவதற்கான காலத்தை மேலும் நீட்டிக்க வேளாண் மற்றும் விவசாய காப்பீட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
பேரிடர் காரணமாக தபால் நிலையங்களை அணுகுவதில் ஏற்பட்ட சிரமத்தை கருத்தில் கொண்டு, இந்த மாதத்திற்கான விவசாயிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான காலத்தை ஜனவரி 31 வரை நீட்டிக்க வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டிசம்பர் மாத ஓய்வூதியம்
அதன்படி, விவசாயிகள் மற்றும் மீனவர் ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜனவரி 31 வரை வேலை நாட்களில் தொடர்புடைய தபால் மற்றும் துணை தபால் நிலையங்களில் டிசம்பர் மாத ஓய்வூதியத்தைப் பெற வாய்ப்பு உள்ளது.

அதன்படி, விவசாய ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை 178,753 என்றும், மீனவர் ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை 6,312 என்றும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |