சட்டமா அதிபரின் பதவிக் கால நீடிப்பு பரிந்துரை அரசமைப்பு சபையால் மீண்டும் நிராகரிப்பு!
சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் (Sanjay Rajaratnam) பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான அதிபர் ரணிலின் பரிந்துரை நடந்த அரசமைப்பு சபைக் கூட்டத்தில் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த கூட்டமானது நேற்று (26) நடைபெற்றது.
இதன்போது எதிராக 5 வாக்குகளும், ஆதரவாக 3 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் குறித்த பரிந்துரை மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பதவிக் காலம்
இதேவேளை, அரசமைப்பு சபையின் முடிவைப் புறந்தள்ளி சட்டமா அதிபரின் சேவைக்காலத்தை நீடித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க விசேட அனுமதியை வழங்கியுள்ளார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது.
முன்னதாக அரசமைப்பு சபைக்கு 8 பக்கங்களைக் கொண்ட காட்டமான கடிதமொன்றை சில தினங்களுக்கு முன்னர் அனுப்பிய அதிபர் ரணில், அரசமைப்புச் சபையின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |