அரசமைப்பு சபையின் முடிவைப் புறந்தள்ளி சட்டமா அதிபரின் சேவையை நீடித்த ரணில்!
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lanka Government
By Shadhu Shanker
இலங்கை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின்( Sanjay Rajaratnam) சேவைக்காலத்தை நீடித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wicremesinghe) விசேட அனுமதியை வழங்கியுள்ளார் என்று அறியமுடிகின்றது.
சட்டமா அதிபரின் பதவிக் காலம் இன்றுடன் (26) நிறைவடையவுள்ளது.
அதேசமயம் ஏற்கனவே அவருக்காக அதிபர் மேற்கொண்ட சிபாரிசை நிராகரித்த அரசமைப்பு சபை இன்று விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளது.
சட்டமா அதிபரின் சேவை
இந்தப் பின்னணியிலேயே அரசமைப்பு சபையின் முடிவைப் புறந்தள்ளி அதிபர் ரணில், சட்டமா அதிபரின் சேவைக் காலத்தை நீடித்திருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது.
முன்னதாக அரசமைப்பு சபைக்கு 8 பக்கங்களைக் கொண்ட காட்டமான கடிதமொன்றை சில தினங்களுக்கு முன்னர் அனுப்பிய அதிபர் ரணில், அரசமைப்புச் சபையின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 23 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்