கொழும்பிலிருந்து யாழிற்கு விசேட போக்குவரத்து சேவை : வெளியான அறிவிப்பு
தீபாவளி பண்டிகைக்காக கிராமப்புறங்களுக்கு வருகை தரும் மக்களின் வசதிக்காக விசேட போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் டி.எச்.ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இன்று (18) புறக்கோட்டை போதிராஜ மாவத்தை பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, நுவரெலியா, மஸ்கெலியா, நானுஓயா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு 75 மேலதிக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
நாளை (19) கொழும்பிலிருந்து அந்தப் பகுதிகளுக்கு 73 மேலதிக பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்து சேவை 24 மணி நேரமும் இயங்கும்.
இலங்கை போக்குவரத்து சபை
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) முதல் கொழும்புக்குத் திரும்பும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபையின் 12 பிராந்திய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்காக புறக்கோட்டையில் உள்ள மகும்புர மற்றும் பாஸ்டியன் மாவத்தையிலிருந்து சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்றும் (18) நாளையும் (19) தொடருந்து சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
