போலி முகநூல் பதிவுகளை வைத்து சீனா ஆடிய ஆட்டம் அம்பலம்
போலி முகநூல் பதிவுகள் மூலம் வெளியிடப்படும் தகவல்களை சீன அரசு ஊடகங்கள் வெளியிட்டு அதனை உண்மையென நிரூபிக்கும் வகையில் செயற்பட்டமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த நிலையில் சீனாவில் இயங்கிய சுமார் 500ற்கும் மேற்பட்ட போலி பேஸ்புக் கணக்குகளை, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான “மெடா பிளட்போர்ம்” முடக்கியுள்ளது.
கொவிட்−19 ஆரம்பம் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான செய்திகளை இந்த போலி கணக்குகளின் ஊடாக பகிர்ந்து வந்துள்ளமை கண்டறியப்பட்ட நிலையிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸர்லாந்து விஞ்ஞானியான வில்சன் எட்வேர்ட் என்பவரின் பெயரில் போலி கணக்குகளை ஆரம்பித்து, போலி தகவல்களை பரப்பி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பேஸ்புக் மாத்திரமன்றி, இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இவ்வாறான போலி தகவல்கள் பகிரப்பட்டுள்ளதுடன், அந்த கணக்குகளையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.