பிரபாகரனின் ஆரம்ப காலக் கூட்டு - அவிழும் உண்மைகள்
வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த எமது தமிழ் பேசும் மக்களுக்கான தலைமைத்துவம் என்பது ஒரு வெற்றிடம். இன்று சரியான தலைமைத்துவம் இல்லை என்கிறார் ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) செயலாளர் இராஜநாதன் பிரபாகரன்.
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்துக்களைப் பகிர்ந்த அவர், 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையே இடம்பெற்ற போர் நிமிர்த்தம் எனக்கு முன்பாக இருந்த செயலாளர் பாலகுமார் உட்பட கணிசமான உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்பட்டார்கள்.
ஒரு பகுதியினராகிய நாங்கள் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதே ஒதுங்கிக் கொண்டோம்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததா? அல்லது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா? அல்லது இடைக்கால ஓய்வா என்பது தெரியவில்லை.
தமிழ் பேசும் மக்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லை என்பது இன்று சர்வதேசம் அறிந்த உண்மை.
காரணம் என்னவென்றால் ஆரம்ப காலத்தில் போராடி பெற்றுக்கொண்ட மாகாண சபை, 13 என்ற அந்த தீர்வுக்கு நாங்கள் இன்னமும் கிட்டக் கூட வரவில்லை. அதில் நாங்கள் பூஜ்ஜியம்.
மக்களுடனான வேலைத்திட்டங்கள் ஊடாக தான் அரசியலை நகர்த்த முடியுமே ஒழிய, அரசியலூடாக மக்களுக்கு வேலை செய்ய முடியாது. அது பொய்” - என்றார்.
இந்தக் காலம் தமிழர்களைப் பொறுத்த வரையில், பேசப்பட வேண்டிய - அவதானமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கிறது. நிறைய விடயங்கள் எதிர்பார்ப்பை தாண்டி, நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) என்ன செய்துகொண்டிருக்கிறது?
பதில் தருகிறார் அதன் செயலாளர் இராஜநாதன் பிரபாகரன்,
