ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைக்க அரசாங்கம் விரும்பவில்லை: நாலக கொடஹேவா தகவல்
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை மறைக்க அரசாங்கம் விரும்பவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த விடயம் தொடர்பாக அண்மையில் அரச தலைவருடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும் தெரிவித்தார்.
உண்மைகளை மறைப்பதன் மூலம் தாம் நண்மையடைய போவதில்லை என கூறினார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்த தற்போதைய அரசாங்கத்தின் ஒரே குறைபாடு தொடர்பாடல் இல்லாததுதான் என்றும் அமைச்சர் கூறினார்.
எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு உண்மைகளை உடனுக்கு உடன் வழங்குவோம் என நம்புவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்