மன்னாரில் போலி நாணயத்தாள் புழக்கம் - சிக்கிய 36 தாள்கள் (படங்கள்)
Sri Lanka Police
Mannar
By pavan
மன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று வியாழக்கிழமை(6) மாலை மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 500 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 15 உம், 1000 ரூபாய் போலி தாள்கள் 12 உம், 5000 ரூபாய் போலி தாள்கள் 09 உம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் இருந்து 64 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட போலி நாணயத் தாள்களும் மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 5 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி