செவ்வந்தியின் பாணியில் மட்டக்களப்பில் கைது செய்யப்பட போலி சட்டத்தரணி!

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka Law and Order
By Bavan Nov 11, 2025 01:51 PM GMT
Report

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் உள்நுழைந்து வழக்காடி தருவதாக பொதுமக்கள் பலரிடம் பல இலட்சம் ரூபாவை மோசடி செய்த ஆண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, குறித்த நபர் சனிக்கிழமை(08) ஓந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பில் ஒரு வீட்டிலிருந்து திருடப்பட்ட தங்க நகைகள், பின்னர் மீட்கப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 3

மாவீரர் தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கும் பூட்டு!

மாவீரர் தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கும் பூட்டு!

போலி சட்டத்தரணி

குறித்த தங்க நகைகளை மீளப் பெறுவது தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணையை வழக்காடுவதற்கு நல்ல சட்டத்தரணி ஒருவரை அவற்றின் உரிமையாளரான பெண்ணொருவர் தேடியுள்ளார்.

செவ்வந்தியின் பாணியில் மட்டக்களப்பில் கைது செய்யப்பட போலி சட்டத்தரணி! | Fake Lawyer Arrested In Batticaloa

அவருக்கு அறிமுகமான ஒருவர், தனக்கு வழக்காடிய நல்ல சட்டத்தரணி ஒருவர் இருப்பதாக போலி சட்டதரணியின் தொலைபேசி இலக்கத்தை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண் அந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்ட நிலையில், போலி சட்டத்தரணி தான் அந்த தங்க ஆபரணங்களை மீட்டு தருவதாகவும் இதனை மிக விரைவாக மீட்பதற்கு நீதிமன்றத்தில் சிலருக்கு பணம் வழங்க வேண்டும் எனவும் கூறியதோடு வழக்கு தொகையாக எனக்கு 2 இலட்சம் ரூபாய் தருமாறும் கோரியுள்ளார். அதற்கு குறித்த பெண் சம்மதித்து அவருக்கு முற்பணமாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார்.

அடுத்து சில தினங்களின் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் வழக்கிற்கு நீதிமன்றத்துக்கு வருமாறு கடிதம் வந்துள்ளது.

இந்நிலையில், போலி சட்டத்தரணி தான் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்ததையடுத்து, வழக்கிற்கு வருமாறு அழைப்பு கடிதம் வந்துள்ளதாக குறித்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது குறித்த பெண்ணுக்கு, நவம்பர் மாதம் திகதியிடப்பட்ட வழக்கை பணம் வழங்கி முன்கூட்டியே மாற்றியிருப்பதால் 3 தினங்களில் நீதிமன்றத்துக்கு வருமாறு அழைப்பு கிடைத்துள்ளது.

வழக்கு விசாரணை இதனையடுத்து, அங்குள்ள சட்டத்தரணி ஒருவருடன் தொடர்பு கொண்டு தான் கொழும்பு உயர் நீதிமன்ற சட்டத்தரணி என அறிமுகப்படுத்தி எனக்கு கல்முனை மற்றும் திருகோணமலை போன்ற உயர்நீதிமன்றங்களில் வழக்கு இருப்பதாகவும் தனது வாடிக்கையாளர் ஒருவரின் வழக்கை எடுத்து நடாத்துமாறும் கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த சட்டத்தரணி அந்த வாடிக்கையாளரை தன்னை சந்திக்க அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வழக்கு தொடர்பாக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் உள்ள குறித்த சட்டத்தரணியை பாதிக்கப்பட்ட பெண் சந்தித்து வழக்கு தொடர்பாக தெரிவித்ததையடுத்து, வழக்கு விசாரணைக்கு அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (06.11.2025) வழக்கு விசாரணைக்காக குறித்த பெண் மற்றும் போலி சட்டத்தரணி சென்றுள்ள நிலையில், ஏற்கனவே வழக்கிற்கு முன்னிலையாகிய சட்டத்தரணி இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து, அவரை அங்கிருந்து பதிவாளர் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று இவர் சட்டத்தரணியா என்பதை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளார்.

அதனையடுத்து, நீதிமன்ற பதிவாளர் போலி சட்டத்தரணியிடம் அடையாள அட்டையை கோரிய போது, அவர் தனது வாகனத்தில் இருக்கிறது எடுத்துக் கொண்டு வருவதாக தெரிவித்து அங்கிருந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதிக்கு சென்று தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

யாழ். திருவள்ளுவர் கலாசார மையம் தொடர்பில் விசேட தீர்மானம்

யாழ். திருவள்ளுவர் கலாசார மையம் தொடர்பில் விசேட தீர்மானம்

மேலதிக விசாரணை

இதனைத் தொடர்ந்து இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

செவ்வந்தியின் பாணியில் மட்டக்களப்பில் கைது செய்யப்பட போலி சட்டத்தரணி! | Fake Lawyer Arrested In Batticaloa

அதன் பின்னர், குறித்த போலி சட்டத்தரணி நேற்று சனிக்கிழமை இரவு ஓந்தாச்சிமடத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல நீதிமன்றத்திற்குள் தனது வாகனத்துடன் உள்நுழைந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி நீதிமன்ற வளாகத்திற்குள் நடமாடி வந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர், கறுப்பு கழுத்துப்பட்டி, கோட் சூட், வழக்குகளை கொண்ட 16 கோப்புகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் அவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டெல்லி குண்டுவெடிப்பில் சிக்கிய உமர் முகம்மது: இந்தியாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

டெல்லி குண்டுவெடிப்பில் சிக்கிய உமர் முகம்மது: இந்தியாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி மாடியில் இருந்து வீழ்ந்து படுகாயம்

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி மாடியில் இருந்து வீழ்ந்து படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025