மட்டக்களப்பை சேர்ந்த இருவர் சிஐடியினரால் அதிரடி கைது!
CID - Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
சமூக ஊடகங்களில் 'டயலொக் மெகா வாசனா' என்ற போலி லொத்தர் திட்டத்தின் மூலம் பொதுமக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இதன்போது சுமார் ரூ. 10 மில்லியன் மோசடி செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) வடக்குப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

29 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விசாரணையில் கண்டறியப்பட்டள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிஐடியினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
6ம் ஆண்டு நினைவஞ்சலி