உயர்தரப் பரீட்சை பெறுபேறு: பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!
கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு குறித்து இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த பெறுபெறுகள் தொடர்பாக தற்போது வெளியிடப்படும் ஊடக அறிக்கைகள் தவறானவை என்று திணைக்களம் அதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பரீட்சை பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
தவறான செய்தி
அதன்படி, பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் தவறான செய்திகளால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
இந்த நிலையில், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வரும் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக இன்று காலை வெளியான செய்தி போலியானது என மேற்கண்ட அறிவிப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
