தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. - விஜய்க்கு எதிராக கதறும் டிடிவி தினகரன்

Vijay TTV Dhinakaran World TVK
By Thulsi May 09, 2026 07:14 AM GMT
Report

புதிய இணைப்பு

காமராஜ் கையெழுத்திட்டதாக கூறி தவெகவினர் வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

காமராஜ் கையெழுத்திட்டதாக வெளியான வீடியோ எங்கு எடுக்கப்பட்டது? காமராஜ் கையெழுத்திடுவது போன்ற வீடியோவை எடுத்தது யார்? விஜய்யா, ஆனந்தா, செங்கோட்டையனா? அந்த வீடியோ ஏஐ ஆக கூட இருக்கலாம்.

ஏஐ மூலம் என்ன வேண்டுமானாலும் உருவாக்கலாம். நகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தபோது, அசல் கடிதம் எங்கே என அவர் கேட்டிருக்கிறார். அதற்கு தவெகவினர் தருவதாக சொல்லிவிட்டு வந்துவிட்டனர். அது மோசடி வீடியோ என ஆளுநரிடம் கூறிவிட்டோம் என்றார்.

முதலாம் இணைப்பு

தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அமமுக பெயரில் போலி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவ்க்கின்றன.

அத்துடன் நான் அதிமுக கூட்டணிக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறேன். விஜய்க்கு ஆதரவு அளிக்கவில்லை" என்று எம்.எல்.ஏ காமராஜ் தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிய வருகையில், தவெக தலைவர் விஜய் நேற்று இரவு ஆளுநர் அர்லேகரை சந்தித்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

முதலமைச்சர் ஆகிறார் விஜய்! பதவியேற்பு குறித்து வெளியாகிய அறிவிப்பு

முதலமைச்சர் ஆகிறார் விஜய்! பதவியேற்பு குறித்து வெளியாகிய அறிவிப்பு

ஆட்சி அமைக்க ஆதரவு

அப்போது அமமுக எம்.எல்.ஏ. காமராஜ், விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக கடிதம் ஒன்றும் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து ஆளுநர் மாளிகைக்கு உடனே விரைந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆளுநர் அர்லேகரை சந்தித்தார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துதான் தமது கட்சி எம்.எல்.ஏ. காமராஜ் தம்மிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

ஆளுநரிடம் தமது கட்சி எம்.எல்.ஏ. காமராஜ் பெயரில் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தந்துள்ளதாக கொடுக்கப்பட்ட கடிதம் போலியானது என புகார் தெரிவித்திருந்தார்.

இதனையே செய்தியாளர்களிடமும் டிடிவி தினகரன் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து ஆளுநர் மாளிகை வளாகத்தில் டிடிவி தினகரன், காமராஜ் எம்.எல்.ஏ. இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து! அதிகாலையிலேயே பரபரப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து! அதிகாலையிலேயே பரபரப்பு

போலியாக எனது பெயரில் கடிதம் 

அப்போது ஆளுநரிடம் காமராஜ் எம்.எல்.ஏ. கொடுத்த புகார் கடிதத்தை டிடிவி தினகரன் வாசித்தார். அந்த புகாரில் “மன்னார்குடி தொகுதியிலிருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நான் காமராஜ், தந்தை பெயர் சௌந்தரராஜன். தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நான் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக ஒரு கடிதம் வாட்ஸ்அப்பில் உலா வருவதாக என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

[5PSV3Y ]

ஆனால், நான் அத்தகைய ஆதரவு கடிதம் எதையும் வழங்கவில்லை. அந்தக் கடிதம் எனது அனுமதி இன்றி பரப்பப்படுகிறது.

நானும் எனது கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் இணைந்து, தமிழகத்தில் புதிய அரசு அமைக்க எடப்பாடி கே. பழனிசாமிக்கு எங்களது கட்சியின் அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட்டில் ஏற்கனவே ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளோம்.

08-05-2026 அன்று அந்த ஆதரவு கடிதத்தை அளித்துள்ளோம். எனவே, ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த கடிதத்தையே நான் இப்போதும் உறுதியாகப் பின்பற்றுகிறேன்.  

யாரோ போலியாக எனது பெயரில் கடிதம் தயாரித்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளனர். அது குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என காமராஜ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

ஏமாற்றத்தில் முடியும் விஜய்யின் முதல்வர் கனவு.! தவெக தொண்டர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

ஏமாற்றத்தில் முடியும் விஜய்யின் முதல்வர் கனவு.! தவெக தொண்டர்களுக்கு வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026