இறைவரித் திணைக்கள அதிகாரிகள் பேரில் பணமோசடி: இருவர் அதிரடியாக கைது
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளை போன்று செயற்பட்டு பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும், களுத்துறை (Kalutara) - அளுத்கம - தர்கா நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை குறித்து மேலும் தெரியவருகையில், வர்த்தக நிலையங்களில் வருமான வரியை அறவிட்ட சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் பிரதேச மக்களால் அளுத்கம காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகவே சந்தேகநபர்கள் இருவரும் கைதாகியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளை போன்று நடித்து மக்களை ஏமாற்றும் மோசடிகள் தொடர்ச்சியாகவே இடம்பெற்று வருவதால் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |