இணையத்தளத்தின் ஊடாக பொய்யான தகவல்களை வழங்குபவர்கள் நீதித்துறை மூலமே தண்டிக்கப்படுவர் : வஜிர அபேவர்தன

Sri Lanka Cyber Attack Singapore Vajira Abeywardena
By Sathangani Oct 17, 2023 03:20 AM GMT
Report

இலங்கையில்  சகலருக்கும் சமூக ஊடக சுதந்திரம் இருந்தாலும், பிறரை அவமதிக்கும் நோக்கில் அல்லது பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் விதிகள் கொண்டு வரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்தி இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு உயர்த்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்துத் தெரிவிக்கும் போதே வஜிர அபேவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியீடு தொடர்பில் விசாரணை

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியீடு தொடர்பில் விசாரணை


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

நீதித்துறை மூலம் தண்டிக்கப்படல் 

”இணையத்தள  முறைகளின் பாதுகாப்பு தொடர்பான ஆணைக்குழுவின் நியமனத்தின் ஊடாக, ஆய்வு ரீதியிலான ஊடகவியலாளரும் அதேபோன்று ஆராய்ந்து பார்க்கக்கூடிய பிரஜையும் உருவாக்கப்படுவர்.

இணையத்தளத்தின் ஊடாக பொய்யான தகவல்களை வழங்குபவர்கள் நீதித்துறை மூலமே தண்டிக்கப்படுவர் : வஜிர அபேவர்தன | False Information In Website Punished By Judiciary

இணையத்தளத்தின் ஊடாக அவதூறான மற்றும் பொய்யான தகவல்களை வழங்குபவர்கள் நீதித்துறை மூலமே தண்டிக்கப்படுவர்.

உலகிலும் இலங்கையிலும் தொடர்பாடல் வளர்ச்சியடைந்ததன் மூலம் மக்கள் பல்வேறு அனுகூலங்களைப் பெற்றனர். ஆனால் இறுதியில் மக்களை தவறாக வழிநடத்தவும் அவமானப்படுத்தவும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகின்றமை ஒரு வருந்தத்தக்க விடயமாகும்.

உருக்குலைந்த காசா! பிணங்களை கையாள திணறும் ஐ.நா

உருக்குலைந்த காசா! பிணங்களை கையாள திணறும் ஐ.நா


சிங்கப்பூரின் ஊடக சட்டம்

தற்போது இலங்கையில் அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் தொலைக்காட்சிச் சட்டத்தால் மாத்திரமே கட்டுப்படுத்தப்படுகின்றன. அது எவ்வகையிலும் நியாயமான ஊடக வளர்ச்சிக்கு பொருத்தமற்றது.

இணையத்தளத்தின் ஊடாக பொய்யான தகவல்களை வழங்குபவர்கள் நீதித்துறை மூலமே தண்டிக்கப்படுவர் : வஜிர அபேவர்தன | False Information In Website Punished By Judiciary

அவ்வாறென்றால், உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகள் தகவல் தொடர்பாடலை அல்லது ஊடகங்களை ஒழுங்குபடுத்தவும், மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கவும், சட்ட விதி முறைகளை தயாரித்துள்ளன.

அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவாருங்கள் : முன்னரங்கப் பாதுகாவலர்கள் அமைப்பு கடும் கண்டனம்

அடக்குமுறைகளை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவாருங்கள் : முன்னரங்கப் பாதுகாவலர்கள் அமைப்பு கடும் கண்டனம்


உலகில் உள்ள முகநூல் உள்ளிட்ட ஏனைய தகவல் பரிமாற்றத் தளங்கள் மக்களுக்கு தீங்கு விளைவிப்பதைக் கட்டுப்படுத்தல், சரியான தகவல்களை சிறந்த முறையில் மக்களுக்கு வழங்குவது மற்றும் தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல்  ஆகியவை கற்ற மற்றும் முன்னேறி வரும் ஒரு சமூகத்துக்கு மிக முக்கியமான விடயம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இலங்கையிலுள்ள அனைத்து ஊடக நிறுவனங்களும் சிங்கப்பூரின் ஊடகச் சட்டத்தை வாசித்தால் அது மிகவும் முக்கியமானது. ஒளிபரப்பு சேவை அனுமதி வழங்குவதற்கும், அதை இரத்து செய்வதற்கும், தவறான தகவல்களை வழங்கினால் அதைத் திருத்துவதற்குத் தேவையான தண்டனை விதிக்கவும் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இணையத்தள பாதுகாப்பு சட்டம்

அரசியலில் பொய்களை பரப்பும் கலாசாரம் இலங்கையில் மாற வேண்டும். அதேநேரம், அத்தியாவசியமான உண்மைகளை மறைக்காமல் இருப்பது குறித்தும் ஊடகங்களுக்கு பொறுப்பு உள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இணையத்தளத்தின் ஊடாக பொய்யான தகவல்களை வழங்குபவர்கள் நீதித்துறை மூலமே தண்டிக்கப்படுவர் : வஜிர அபேவர்தன | False Information In Website Punished By Judiciary

எனவே இலங்கையர்கள் என்ற வகையில், ஊடகத்துறையை விருத்தி செய்வதற்கும் இலங்கை மக்களை உயர்மட்ட அறிவுத்துறைக்குக் கொண்டு செல்வதற்கும் தற்போது முறைமையற்ற ஊடக கலாசாரத்தை சட்டப்பூர்வமாக்குவது மிகவும் அவசியமாகும்.

மக்களே, மக்களை இழிவுபடுத்துவது, மக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது, போன்று மக்களே மக்களை அழிவுப் பாதைக்கு இட்டுச்செல்லப்படுவதைத் தடுப்பது ,புதிய ஒளிபரப்பு அதிகார சபைச் சட்டமான “இணையத்தள முறைகளின் பாதுகாப்பு தொடர்பிலான சட்டம்” மூலம் செய்யப்படும் முக்கிய செயல்முறைகளில் ஒன்றாகும்.” எனத் தெரிவித்தார்.


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026