ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் பலி - கொக்கட்டிச்சோலையில் சம்பவம்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு பிரதேசத்தில் ஆற்றில் தோணி கவிழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று(06) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தப்பர் வெள்ளத்தம்பி என்பவரே பலியானவராவார்.
விசாரணை
வழக்கம் போல் நேற்று குறித்த ஆற்றுப்பகுதிக்கு இறால் பிடிப்பதற்கு தனது தோணியில் சென்றிருந்த போது ஆற்றுப்பகுதியில் திடிரென ஏற்பட்ட அதிகமான காற்றினால் குறித்த நபரின் தோணி நீரில் கவிழ்ந்து இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போலின் உத்தரவிற்கமைய, சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
