திருகோணமலையில் மாடியிலிருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு
Trincomalee
Sri Lanka Police Investigation
Death
By Independent Writer
Courtesy: Buharys Mohamed
திருகோணமலை, சேருநுவர காவல்துறை பிரிவிலுள்ள செல்வநகர் பகுதியில் தேனீர் கடையொன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவமாது இன்று புதன்கிழமை (01) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தோப்பூர் -பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சாதீக் றிஸ்வி வயது (48) என சேருநுவர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
இந்த சம்பவம் குறித்து சந்தேகம் காவல்துறையினர் வெளியிட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவ இடத்திற்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி, சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்து சடலத்தை பார்வையிட்ட பின்னர் , சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி