தேனிசைத் தென்றல் தேவாவின் தம்பி..! இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
இசையமைப்பாளர் தேவாவின் தம்பியும் இசையமைப்பாளருமான சபேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.
சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள இல்லத்தில் இன்று பிற்பகல் 12.15 மணி அளவில் சபேஷின் உயிர் பிரிந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
'சமுத்திரம்', 'மாயாண்டி குடும்பத்தார்', 'தவமாய் தவமிருந்து', 'பொக்கிஷம்' போன்ற பல பிரபலமான திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
[JTRAOJK ]
திரையுலகினருக்கு அதிர்ச்சி
சபேஷ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத்தலைவராகவும் இருந்துள்ளார். இசையமைப்பாளர் சபேஷின் மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் உடல்நல குறைவால் காலமான சபேஷின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சபேஷின் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இறுதி சடங்கு நாளை மாலை 3 மணிக்கு சவுத்ரி நகர், வளசரவாக்கம் அருகே இருக்கக் கூடிய பிருந்தாவனம் நகர் இடுகாட்டில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 3 மணி நேரம் முன்
